Ganja karuppu makes barani to cry
"பிக் பாஸ்" நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடமும் அதிகமாகவே இருந்தது.
மடிவு அறிவிக்கப்படும் தருணம் வந்த போது, இதை பார்ப்பவர்கள் மனநிலை தேர்வு எழுதிய மாணவன், தேர்வு முடிவுக்கு கார்த்திருப்பது போல் தான் இருந்தது.
இப்படி மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த வாரத்தின் எலிமினேஷன் கஞ்சா கருப்பு என்பதை அறிவித்தார் கமலஹாசன். கஞ்சா கருப்பு எலிமினேஷன் ஆகவேண்டும் என்று பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்திருப்பதாக கமல் கூறினார்.
எலிமினேஷன் அறிவிக்கப்பட்டத்துடன், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற தயாரான கஞ்சா கருப்பு அனைவரையும் கட்டிப்பிடித்து, பிரியா விடை கொடுத்தார். எப்படியும் தன்னிடமும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு தான் கஞ்சா கருப்பு செல்வார் என ஓரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்த பரணிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
கஞ்சா கருப்பு, இவர்கள் இருவருக்கும் நடைபெற்ற சில பிரச்சனைகளை விளையாட்டாக பார்க்காமல் உண்மையிலேயே ஒரு பிரச்சனையாக எடுத்துக்கொண்டு பரணியை எதிரியாகவே நினைத்து வெளியேறினார். ஆனால் பரணி அவர் சொல்லிவிட்டு போவாரா என கண்களில் கண்ணீரோடு பாவமாக தான் பார்த்தார்...
