Ganja Karuppu gets evicted from Bigg Boss house

நமீதாவை பிரிவது வருத்தமாக உள்ளதாக பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் கடந்த இருந்து வாரங்களாக நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 பங்கேற்பாளர்களில் முதலில் ஸ்ரீ அடுத்ததாக அனுயா வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று நடிகர் எல்லோரிடமும் கலகலப்பாக வருத்தத்தோடு வழியனுப்பி வைத்தனர்.

கடந்த வார இறுதியான நேற்று பரணி , கஞ்சா கருப்பு , ஓவியா இவர்களில் ஒருவர் வெளியேற வேண்டும் என்று சொல்லப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக பார்வையாளர்களின் வாக்குகள் அடிப்படையில் கஞ்சாகருப்பு வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கஞ்சாகருப்பு பின்னர் மிஸ்டர் பிக் பாஸ் கமல்ஹாசனுடன் தன்னுடைய 13 நாள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். 

இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்த 13 நாளில் தான் சமையல், யோகா கற்று கொண்டதாகவும், நமீதாவை பிரிவது குறித்து தான் வருத்தமாக உள்ளதாக தெரிவித்தார். பிக் பாஸ் வீட்டில் கலகலப்பாக, கள்ளங் கபடமின்றி எல்லோரிடத்திலும் ஜாலியாக இருந்தது கஞ்சா கருப்புதான் என்பது குறிப்பிடத்தக்கது.