இயக்குனர் ஏ.எல்.விஜய், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து இயக்க உள்ள 'தலைவி' என்கிற படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உள்ளார்.

ஏற்கனவே பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், இந்த படத்திற்காக ஓவர் டைம் எடுத்து பல்வேறு பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா வேடத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக, பரதநாட்டியம் கற்க துவங்கியுள்ளாராம். அதே போல் தமிழ் சொற்களை உச்சரிக்கவும் பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.  

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தன் சிறுவயதில் இருந்தே முறைப்படி பரதம் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் மொழியையும் அதன் அழகு மாறாமல் உச்சரிக்க கூடியவர்.

 

ஏ.எல்.விஜய் இயக்க உள்ள இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. மேலும் இதில் மற்ற பிரபலங்கள் யார் யார் நடிக்க உள்ளனர் என்கிற தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.