தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகம் பார்வையாளர்களை கொண்ட நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சிய்ல் முதல் சீசன் அனைத்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு பிரம்மாண்ட அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் மூன்றாவது இடத்தை பிடித்தவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். நடிப்பு மட்டுமல்லாமல் சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வு போராட்டங்கள் போன்றவற்றிலும் அதிகம் ஈடுபாடு கொண்ட இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் குறித்து தனது அதிருப்தியை சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.
 

பிக் பாஸ் நிகழ்ச்சிய்ன் முதல் சீசன் போல இரண்டாவது சீசன் இல்லை. இதனால் மக்கள் மத்தியில் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு அந்த அளவிற்கு வரவேற்பும் இல்லை. ஆனாலும் விமர்சன நோக்கத்துடன் அதிக அளவிலான மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளவில்லை என்பஹ்டு தான் கணேஷின் வருத்தமாக இருக்கிறது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. 

பிக் பாஸ் போன்ற ஒரு மாபெரும் நிகழ்ச்சியில் இது போன்ற கொடுமைகளுக்கு எதிராக ஏதாவது உபயோகமானதாக செய்யலாம். அதை விட்டுவிட்டு, டிஆர்பி-க்காக வெறும் சர்ச்சைகளை மட்டும் கிளப்பி கொண்டிருக்கிறது பிக் பாஸ். தனிப்பட்ட முறையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மீது நான் கடும் அதிருப்தியில் இருக்கிறேன். பிக் பாஸ் மக்கள் மத்தியில் நன்மதிப்பை இழந்து கொண்டிருக்கிறது. இதை கருத்தில் கொண்டு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நல்ல விஷயங்களை பிக் பாஸ் வீட்டில் செய்ய பாருங்கள் என அறிவுறை கூறி இருக்கிறார் கணேஷ்.