நடிகை திரிஷாவுக்கு ஜோடியாக 'அபியும் நானும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். பின் 'உன்னை போல் ஒருவன்', 'கோ' , உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 

அச்சம் தவிர் , மாயாவி, பிக்பாஸ் போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இதில் இவரை பற்றி ரசிகர்கள் நன்கு தெரிந்து கொண்டது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான். இவரின் அமைதிக்கும், அனைவரிடக்கும் இவர் நடந்து கொண்ட விதமும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், இவர் சின்னத்திரையில் போட்டியாளராக இல்லாமல் தொகுப்பாளராக களமிறங்க உள்ளார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி தற்போது வெளியாகி வைரலாக பரவிக்கொண்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஆரம்பமாக உள்ள இந்த நிகழ்ச்சியின் பெயர் 'ஆக்ஷன் ஸ்டார்' இதில் மொத்தம் 12 பெண்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். அவரவர்களுக்கு கொடுக்கப்படும் கடுமையான டாஸ்கை எதிர்கொண்டு விளையாடி இறுதியில் யார்  வெற்றிபெறுவார்கள் என்பதே இந்த நிகழ்ச்சியின் சாராம்சம். விரைவில் ஆரம்பமாக உள்ள இந்த நிகழ்ச்சியில் தான் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு போட்டியாக தொகுப்பாளராக கலக்க வருகிறார் கணேஷ் வெங்கட்ராம்.