'காஞ்சனா 2 ' படத்திற்கு பின் தமிழ் படங்கள் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்த நடிகை டாப்சி. பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின், டாப்சி தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி, என மூன்று மொழிகளில் நடித்துள்ள  'கேம் ஓவர்' திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை,  இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். 'Y Not studious சார்பில், ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும்  மொத்தம் 1200 திரையரங்கங்களில் பிரமாண்டமாக வெளியிட படக்குழு  முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.