சிம்புவை அடுத்த சூப்பர் ஸ்டாராக்கிக் காட்டுகிறேன் என்று சவால்விட்ட சீமான் சின்னதாக ஒரு யூ டர்ன் அடுத்து ஜீ.வி.பிரகாஷ் பக்கம் போயிருக்கிறார். யெஸ் சீமான் மிக விரைவில் இயக்கவிருக்கும் படத்தில் கதை நாயகனாக நடிக்க ஜீ.வி.கமிட் ஆகியிருக்கிறார்.

தனது ’வாழ்த்துகள்’படத்தோல்விக்குப் பின்னர் முழு நேர அரசியல்வாதியாகிவிட்ட சீமான், அவ்வப்போது இயக்குநராகும் முயற்சியில் ஈடுபட்டு தானும் டயர்டாகி உடன் இருப்பவர்களையும் டயர்டாக்கி விடுவார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட நிறுவனம் துவங்கி படத் தயாரிப்பு வேலைகளிம் மும்முரமாக இறங்கியுள்ள சீமான் இம்முறை ஒரு படத்தை இயக்கியே திருவது என்பதில் ‘மதிய சாப்பாட்டுக்கு மட்டன்தான்’என்கிற அளவுக்கு உறுதியாக இருக்கிறார். இதில் அவரது ஹீரோ பட்டியலில் முதல் இடத்தில் இருந்த சிம்பு ‘மாநாடு’படத்தில் இருந்து வெளியேறிய வகையில் கறுப்பு ஆடாக மாறியுள்ளதால் அடுத்த அதிர்ஷடம் ஜீ.வி.பிரகாஷுக்கு அடித்திருக்கிறது.

சீமான் அழைத்தவுடன் அவரிடம் கதை கூட ஜீ.வி ஒத்துக்கொண்ட அப்படத்துக்கு ‘கோபம்’என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மிக விரைவில் துவங்கவுள்ள இப்படம் தற்கால அரசியலை மிகவும் சூடாக அலசுகிறதாம். படம் முடிவதற்குள் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சியில் பிரகாஷ்குமார் ஐக்கியமானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.