நடிகை  ஸ்ரீ ரெட்டி பத்திரிகையாளர்களை சந்திக்க இருந்த நிலையில் திடீரென அது ரத்து செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது .

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னை படவாய்ப்பு தருவதாக கூறி பாலியல் தொல்லைகள் செய்தவர்களை பட்டியலிட்டதால் தெலுங்கு சினிமா உலகம் பரபரப்பானது போல தற்போது தமிழ் திரையுலகமும் பரபரப்பும் என ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ஒருவித பயத்துடனே அணுகுகிறது  கோலிவுட்.

அவரை அந்த மாதிரி விஷயத்தில் அடித்துக் கொள்ள ஆளே இல்லை. திருமணமான பிறகும் கூட, அவர் என்னுடன் அப்படி இப்படியென இருந்தார் என ஸ்ரீ ரெட்டி பகிரங்கமாக கூறியுள்ளார். தெலுங்கு திரைப்பட உலகில் நடிகைகளை படுக்கை அறைக்கு அழைப்பதாக கூறி ஸ்ரீ ரெட்டி என்ற நடிகை ''ஸ்ரீ லீக்ஸ்'' என்ற பெயரில் நடிகைகளிடம் தவறாக நடந்தவர்கள் பெயர்களையும், புகைப்படங்களையும் வெளியிடப்போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிச்சியை ஏற்படுத்தினார்.

தற்போது தமிழ் திரை பிரபலங்களை டார்கெட் செய்துள்ள  ஸ்ரீரெட்டி  முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை சுமத்தி வருகிறார். தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் திரையுலகில் பரபரப்பை கிளப்பி வரும் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி வருகின்றன.

தன்னை ஆசைகாட்டி பலர் ஏமாற்றியதாக கூறி வரும் ஸ்ரீ ரெட்டி ஒவ்வொரு இடத்திலும்  நீதி கேட்கிறார்,முதல் முறை அவர் பாதிக்கப்பட்டபோதே புகார் கொடுத்திருந்தால் இவ்வளவு நேர்ந்திருக்காது என்று நடிகர் மயில்சாமி கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் கண்ணில் உண்மை தெரிகிறது. நான் அவரைத் தவறாக நினைத்து விட்டேன், அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று நடிகை கஸ்தூரி அவருக்கு ஆதரவு தெரிவித்தார். அதேசமயம் பழம்பெரும் நடிகை லதாவோ, ஸ்ரீ ரெட்டி வீண் விளம்பரம் தேடுகிறார், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீ ரெட்டி நேற்று தனது  ஃபேஸ்புக் பக்கத்தில், இன்று பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாக ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதற்கான ஏற்பாடுகளும் தயாரான நிலையில் திடீரென பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

இது பற்றி நாம் ஸ்ரீ ரெட்டி தரப்பினரிடம் விசாரித்த போது, 'யோசிக்காமல்  அவர் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துவிட்டார். அது குறித்து யோசிக்க அவருக்கு சில நாட்கள் தேவை. எனவே பத்திரிகையாளர்களை சந்திப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினர்.

பத்திரிகையாளர் சந்திப்பு வைக்க இருந்த ஸ்ரீ ரெட்டிக்கு ஏதேனும் மிரட்டல் வந்ததா? அல்லது நடிகர் வாராகி அளித்த புகாரின் எதிரொலியாக பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதா?  என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதுமட்டுமின்றி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஸ்ரீ ரெட்டிக்கு அழுத்தம் ஏதேனும் கொடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கல் உலா வந்து கொண்டிருக்கின்றன.