பிக்பாஸ் சீசன்  4 நிகழ்ச்சி ஆரம்பமாகி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டாவது நாளே குறும்படம் போட  வேண்டும் என்கிற அளவிற்கு பிரச்சனை நேற்றையதினம் தூள் கிளப்பியது. ஆனால் புரோமோவில் பார்த்த அளவிற்கு பிரச்சனை பெரிதாக வில்லை. கடைசியில் சப்னு முடிந்துவிட்டது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் தற்போது இந்த வாரம் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ள நான்கு பேர் யார் யார் என தெரியப்படுத்தும் விதமாக ஒரு புரோமோ வெளியாகியுள்ளது.

லிவிங் ஹாலில் அனைத்து போட்டியாளர்களும் அமர்ந்திருக்க, எழுந்து வந்து பேசும் பாலா, இங்கு உள்ள ஒருவருடைய கதை மற்றொருவருக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளது என கூறுகிறார். உதாரணத்திற்கு சனம் தன்னுடைய 20 வயதில் மேலே இருந்து கீழே விழுந்து, 14 மாதத்திற்கு பின்பு தான் எழுந்து அமர முடிந்ததாக கூறினார் என அவரை பற்றி கூறுகிறார்.

அதே போல் ஆரியின் கதையும் இன்ஸ்பையரிங்காக இருந்தது. 10 பேர் அவருடைய கதையை கேட்டால் சாதிக்க வேண்டும் என்று தோன்றும் என கூறிய பின், இந்த வாரத்தின் நாமினேஷன் செய்பவர்கள் யார் யார் என கூறுகிறார். 

இந்த லிஸ்டில் தற்போது, சனம் ஷெட்டி , கேபிரில்லா , ரேகா, மற்றும் சம்யுக்தா ஆகியோர் பெயரை அறிவிக்கிறார். இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றாலும், அடுத்த வாரம் இந்த நான்கு பெரும் நாமினேஷனில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…