Asianet News TamilAsianet News Tamil

கவர்னராகிறார் அதிமுக முன்னாள் எம்.பி..? எடப்பாடி - ஓ.பி.எஸை வெறுப்பேற்ற மோடி கொடுக்கும் மெகா ஆஃபர்..!

ராஜ்ய சபா பதவியை இழந்த எம்.பி., மைத்ரேயன் மீது பாஜகவின் கருணை பார்வை விழ ஆரம்பித்து இருக்கிறது. 
 

Former MP to become governor?
Author
Tamil Nadu, First Published Jul 13, 2019, 3:44 PM IST

ராஜ்ய சபா பதவியை இழந்த எம்.பி., மைத்ரேயன் மீது பாஜகவின் கருணை பார்வை விழ ஆரம்பித்து இருக்கிறது. 

அதிமுகவில் இரு முறை ராஜ்யசபா எம்.பியாக இருந்த மைத்ரேயன் அடுத்து ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவாக இருந்தார். இம்முறையும் அவர் ராஜ்யசபா சீட் கேட்டு அதிமுகவிடம் அடம்பித்து வந்தாற். ஆனால் இம்முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. Former MP to become governor?Former MP to become governor?

வெறுத்துப்போன அவர், இனியும் ஓ.பி.எஸை நம்பி இருந்தால் பலன் கிடைக்காது என்கிற முடிவுக்கு வந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே பாஜகவில் இருந்து தான் அதிமுகவுக்கு தாவினார். ஆனாலும், பாஜக தலைவர்களுடன் நெருக்கம் இன்னும் இருந்து வருகிறது. ஓ.பி.எஸின் டெல்லி தொடர்புகளுக்கு இவரும் ஒரு முக்கிய காரணம். Former MP to become governor?

இந்நிலையில் நேரடியாக பாஜகவுக்கு தாவும் எண்ணத்தில் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே அவர் பிரதமர் மோடியை நேற்று முன் தினம் சந்தித்தார். அந்தச் சந்திப்பு மைத்ரேயனுக்கு பலனளிக்கும் விதமாக இருக்கும் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் பாஜகவுக்கு மாறுகிறாரா? இல்லையா? என்பது வேறு விஷயம். ஆனால் நிச்சயமாக அவரை ஒரு மாநிலத்தின் கவர்னர் அல்லது மத்தியில் ஒரு முக்கியமான பதவியில் அமர்த்த மோடி தீர்மானித்துவிட்டாதாகக் கூறப்படுகிறது. அதன் அச்சாரம்தாம் பதவி ஓய்வுக்கு பிறகு மோடியைச் சந்தித்து புகைப்படமும் எடுத்து அதனை வெளியிட்டார் என்கிறார்கள். Former MP to become governor?

அப்போது இருவரும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். எல்லாம் பாசிட்டிவ்வாக இருந்ததாக சொல்கிறார்கள். அவரின் சந்திப்பு தமிழகத்தில் எடப்பாடிக்கும், ஓ.பி.எஸுக்கும் தேள் கொட்டியது போல் ஆகி விட்டதாம். உடனடியாக டெல்லியில் உள்ள தமிழக அதிகாரிகளுக்கு போன் போட்டு என்ன நடந்தது..? அப்பாயின்மென்ட் யாரை கேட்டு வாங்கி கொடுத்தீர்கள். உள்ளே பேசிய விஷயங்கள் அனைத்தும் எனக்கு வந்து சேர வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளார்களாம். அவர்களும் தகவல்களை சேகரிக்கும் பணியில்  ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios