முகம் தெரியாத யாரோ ஒருவருக்கு ஏதாவது ஆவிட்டால் கூட நம் மனம் அவர்களுக்காக வருந்தும், இதுவே நாம் தொலைகாட்சி மற்றும் சினிமாவில் அதிகமாக பார்க்கும் பிரபலங்களுக்கு ஏதாவது ஆனது என்று தெரிந்தால் பரிதவித்து போவார்கள் ரசிகர்கள். அவர்களை பற்றி அளவுக்கு அதிகமாக வருந்துவார்கள். 

இந்நிலையில்,  ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகை மர்மான முறையில் இறந்து, அவருடைய உடல் அழுகிய நிலையில் சேற்றில் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகை அடியா சபானி கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார் என்று அவருடைய நண்பர்கள் மற்றும் பெற்றோர் பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளனர். இவரை தீவிரமாக தேடிவந்த வந்த போலீசார் இவருடைய உடலை     மேசிடோநியாவில் சேற்று நிலமொன்றில் கண்டுபிடித்துள்ளனர்.

அதேநேரத்தில் போலீசார் நடிகையின் காதலனிடம் இந்த சம்பவம் குறித்து விசாரித்துள்ளனர். அதில் அவர், சில தினங்களுக்கு முன் நானும், அவரும் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றபோது தகராறு காரணமாக அவரை பாதியிலேயே இறக்கி விட்டுச் சென்றுவிட்டேன் என்று கூறியுள்ளார்.

மிகவும் அழுகிய நிலையில் இருந்த அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்தபோது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நடிகை அடியா மரணம் ஹாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.