fomous actor scolding kamalhassan daugther

கோலிவுட்டை கலக்கி வரும் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன், பாடகியாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தாலும் நுழைந்தார்... தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் தனக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார்.

இவரை கன்னட சினிமாவில் பிரபல நடிகர் துருவா சார்ஜாவிற்கு ஜோடியாக நடிக்க தயாரிப்பு நிறுவனம் ஒன்று கேட்டுள்ளது. ஆனால், ஸ்ருதி தற்போது பல திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதால் கால்ஷீட் பிரச்னை காரணமாக அந்தப் படத்தில் நடிக்க மறுத்துள்ளார். இதனால், கோபமான மற்றொரு பிரபல நடிகர் ஜக்தேஷ் ‘ஏன் இந்த கன்னட தயாரிப்பாளர்கள் திருந்தவே மாட்டேங்குறார்கள்? ஸ்ருதியை மேக்கப் இல்லாமல் பார்த்தால் அனைவருமே தெறித்து ஓடுவார்கள், ஸ்ருதியை விட பெங்களூரில் படிக்கும் கல்லூரி மாணவிகள் அழகு’ என்று கூறியுள்ளார். 

இவருடைய இந்தக் கருத்திற்கு ஒரு சிலர் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்து வந்தாலும் ஸ்ருதியின் ரசிகர்கள் பலரையும் இவருடைய கருத்து கோபப்படுத்தியுள்ளது.