தமிழக அரசியலில் இரண்டு நூற்றாண்டுகளாக ராஜங்கம் செய்தவர், தமிழ்நாட்டின் முன்னேற்றட்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தியவர், தமிழ் அன்னையின் தவப்புதல்வன் என எண்ணிலடங்கா புகழுக்கு சொந்தக்காரர் கலைஞர் கருணாநிதி நேற்று முந்தினம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

நேற்று அவரது பூத உடல் மெரினாவில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. 94 வயதான இந்த மூத்த அரசியல் தலைவருக்கு, திரைத்துறை பிரபலத்திற்கு, அஞ்சலி செலுத்த நாடெங்கிலும் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஒட்டு மொத்த தமிழகமே அவருக்காக துக்கம் அனுசரித்த போது நடிகை ஸ்ருதிஹாசன் செய்த ஒரு செயல், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

சோகமான தருணத்தில் அனைவரும் துக்கம் அனுசரிக்கையில் அவர் மட்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் சந்தோஷமான ஒரு செய்தியை பதிவிட்டிருக்கிறார். அதில் பிரபல வடிவமைப்பாளர்களுடம் பணியாற்றியது தனக்கு மிக்க மகிழ்ச்சி அளித்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் இது போல அவருடைய மகிழ்ச்சியை அவர் பகிர்ந்து கொண்டது அவராது சொந்த விருப்பம் தான். என்ன தான் இருந்தாலும் ஒரு மூத்த தலைவர், அதிலும் திரைத்துறையை சார்ந்தவர், அவருக்காக ஒரு நாள் துக்கம் அனுசரித்துவிட்டு, பொறுத்திருந்து இந்த பதிவை பின்னர் இட்டிருக்கலாமே. என பலரும் ஸ்ருதிஹாசனுக்கு அறிவுறை கூறி இருக்கின்றனர். வேறு சிலரோ அவரை மோசமாக திட்டி தீர்த்திருக்கின்றனர்.