கருணாநிதியுடன் "முதல் சந்திப்பு"....மனம் திறந்த குஷ்பூ...!

நடிகை குஷ்பூ கருணாநிதி மீது அதிக பற்று மரியாதை கொண்டவர். கருணாநிதி மறைந்த பிறகு அவரை சந்தித்த போது நடந்த சில சம்பவங்களை தனியார் பற்றி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். 

அப்போது, கருணாநிதியுடனான முதல் சந்திப்பு 1991 ஆம் ஆண்டு நிகழ்ந்ததாகவும், அப்போதுதான் சின்ன தம்பி திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்து உள்ளார் 

தமிழ் தெரியாது..!

அப்போது  தமிழ் பேச தெரியாத அவர், தமிழ் படங்களில் நடிக்க சற்று சிரமம் அடைந்துள்ளார். இந்த தருணத்தில், 1991 ஆம் ஆண்டு, "சென்னை ஈரோடு செல்லும் ரயிலில் கலைஞரை சந்தித்த போது, நடிப்பு எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு மொழியும் முக்கியம்....என கலைஞர் தெரிவித்தாக உணர்ச்சி பொங்க கூறி உள்ளார்

இதனை தொடர்ந்து, கலைஞரின் கதையிலேயே, அதாவது "இளைஞன்" என்ற படத்தில் சொந்த குரலில் பேசி படத்திலும் நடித்துவிட்டேன் என்று பெருமையாக தெரிவித்து உள்ளார்.

காவேரி மருத்துவமனையில் கலைஞர் இருக்கும் போது அனைத்து கட்சி தலைவர்களும் தொண்டர்களும் அவரை வந்து பார்த்தனர்...என்றும் அவருக்கு நிகர் அவரே தான் என கலைஞரை பற்றி நடிகை குஷ்பூ தெரிவித்து உள்ளார்.