#FIRReleaseDate தெலுங்கு, தமிழ் மொழிகளில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் எப்.ஐ.ஆர் படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இந்த படம் சைக்கோ கொலையாளியை கண்டறியும் சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்டு வெளியானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது FIR என்ற படத்தில் தயாரித்து நடித்து முடித்துள்ளார் விஷ்ணு விஷால். படத்தில் மஞ்சிமா மோகன் ரைசா வில்சன், ரெபா மோனிகா உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக இருந்த மனு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கௌதம் மேனனும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள இந்தப் படம் முன்னதாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே படத்தின் அப்டேட் இன்று வெளியாகும் என விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு, தமிழ் மொழிகளில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் FIR படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

Scroll to load tweet…