film fair awards suggesting rajini and vijay movies

கடந்த வருடம், வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படங்கள் 'தெறி' மற்றும் 'காபலி'. ஒவ்வொரு வருடமும் பிலிம்பேர் விருதுகளுக்காக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற படங்கள் பரிந்துரை செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் தெறி மற்றும் கபாலி படம் படத்திற்கு 8 பிரிவுகளின் கீழ் விருதுகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கபாலி திரைப்படத்தில் சிறந்த நடிகர் (ரஜினி), சிறந்த துணை நடிகை (தன்ஷிகா), சிறந்த பாடல் (நெருப்புடா), சிறந்த பாடகர் (அருண் ராஜ் காமராஜ்), சிறந்த பாடகி (ஸ்வேதா மேனன்), சிறந்த இசையமைப்பாளர் (சந்தோஷ் நாராயணன்), சிறந்த இயக்குனர் (ரஞ்சித்) ஆகிய பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

தெறி திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் (விஜய்) சிறந்த நடிகை (சமந்தா), குழந்தை நட்சத்திரம் (நைனிகா) சிறந்த இயக்குனர் (அட்லீ), சிறந்த துணை நடிகர் (மஹேந்திரன் , மொட்டை ராஜேந்தர்) , சிறந்த இசையமைப்பாளர் (ஜி.வி.பிரகாஷ்), சிறந்த துணை நடிகை (ராதிகா), பாடகர் (நீதி மோகன் ) ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் இந்த வருடம் பிலிம்பேர் விருதுகளில் இந்த இரண்டு திரைப்படங்களும் அதிகபட்சமான விருதுகளை வாங்கி குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.