திரைப்படம், மற்றும் குறும்பட இயக்குனர் அருள்மொழி மாரடைப்பால் மரணமடைந்த செய்தி தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .  குறிப்பாக இயக்குனர் மிஸ்கின் அவருக்கு  கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.  திரைப்படம் மற்றும் குறும் பட இயக்குனர் அருள்மொழி இன்று மாரடைப்பால் காலமானார்,  அவருக்கு வயது (49) இவர்,  சூர்யாவின் அவள் அப்படித்தான் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.  குறிப்பாக தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.  நாசரை ஹீரோவாக வைத்து ஏர்முனை,  காணி நிலம்,  உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். அருண்மொழி திரைப்படங்களை விட அதிக குறும்படங்களில் ஈடுபாடு கொண்டவர் ஆவார்.  நிலமோசடி, மூன்றாவது இனம்,  இசை வானில் இன்னொன்று,  உள்ளிட்ட தனித்துவமான குறும்படங்கள்  எடுத்துள்ளார். 

அத்துடன் இவரின் புகைப்படங்களும் பெரிதும் பலரால் பாராட்ட பட்டவையாகும். எப்பொழுதும் கலை இலக்கியம் எனப் படைப்புகளை சார்ந்தே வாழ்ந்து வந்தவர்.  கலைத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வழிக்காட்டியாக இருந்தார். இந்நிலையில் ஜப்பான் திரைப்பட விழாவில் ஜப்பான் மொழி திரைப்படம் ஒன்றை பார்த்துவிட்டு வெளியில் வரும்போது  மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மரணமடைந்தார்.  இவரின்  மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.   அருண் மொழி மரணம் குறித்து இயக்குனர் மிஸ்கின் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். அது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மிஸ்கின்.  ஒரு மிகப்பெரிய மரம் கீழே விழுந்து விட்டது... பறவையின் இறக்கை முறிந்துவிட்டது...  இன்று காலை அருண்மொழி,  என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார்.  அப்போது,  ஜப்பானிய திரைப்படம் பார்க்க செல்வதாக கூறினார்.  அத்துடன் உங்கள்  திரைப்படம் நன்றாக இருக்கிறது தொடர்ந்து சிறப்பாக செயல்படுங்கள் என்றார். இந்நிலையில் ஒரு படப்பிடிப்பு தளத்தை பார்வையிட  ஒரு சர்ச்சுக்கு சென்றிருந்தபோது  தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது,  அதில் தேசிய  என் தம்பி,  நம் அருள்மொழி மறைந்து விட்டார் எனக் கூறினார், அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்து விட்டேன்.

அருண்மொழியை பலர் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்று சொல்லுவார்கள். அப்படியல்ல அவர் ஆத்மார்த்தமான கலைஞனாக இருந்தார்.  மிகப்பெரிய அளுமையாக வரவேண்டியவர். அவரிடம் பார்ட்டை வாங்க வேண்டும் என்று நான் போராடுவேன், காரணம் அவர் அத்தனை விஷயங்களை அறிந்தவராக இருந்தார். அவர் எப்போதும் ஒரு நட்சத்திரத்தைப் போல என் வீட்டுக் கதவுகளை திறந்து வருவார்.  என் வீட்டிற்கு வந்து அவரே தட்டில் சாப்பாடு போட்டு சாப்பிடுவார்.   என்னுடன் அத்தனை உரிமையாக நடந்துகொள்வார்.  சினிமாவின்  மனசாட்சிதான் அருண்மொழி,  குழந்தைகளுக்கு நாடக கலைகளை சொல்லிக் கொடுக்கும் அவர் ஒரு சிறந்த ஆசான், நல்ல கலைஞர்.  நான் இன்னும் இரண்டு மாதங்களில் ஷூட்டிங் முடித்துவிட்டு வருகிறேன்,  என் வீட்டிற்கு ஒரு நட்சத்திரத்தைப் போல மீண்டும் வாருங்கள் அருண் மொழி, என  மிஸ்கின் உருக்கமாக கூறியுள்ளார்.