fathers day very special for vijay father
நடிகர் விஜய்க்கு எப்போதுமே அவருடைய தந்தை மிகவும் ஸ்பெஷல் தான். காரணம் விஜய் இந்த அளவிற்கு சினிமாவில் சாதிக்க அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்.
இவர் இயக்குனர் மற்றும் இன்றி, தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு துறைகளிலும் கால் பதித்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவருடைய உழைப்பிற்கு மரியாதை செலுத்தும் விதத்தில், இவருக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இந்த விழா நேற்று ஜுன் 17 சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயா பார்க் ஹோட்டலில் நடந்தது.
இதனால் எல்லா வருடத்தை விட இந்த வருட தந்தையர் தினம், விஜய் குடும்பத்திறகு மிகவும் ஸ்பெஷல்லாக இருக்கும் என கூறப்படுகிறது.
