பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்றைய தினம் 8  மணிக்கு ஆரம்பமானது. வழக்கம் போல் செம்ம மாஸாக, என்ட்ரி கொடுத்த நடிகர் கமலஹாசன், போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் முன், பிக்பாஸ் வீட்டை ரசிகர்களுக்கு சுற்றி காட்டினார்.

முதல் போட்டியாளரான, பாத்திமா பாபுவை பிக்பாஸ் வீட்டின் உள்ளேயே வைத்து, அறிமுகம் செய்தார். அதைத்தொடர்ந்து, மொத்தம் ஒவ்வொருவராக மொத்தம் 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

இன்றைய தினம் எப்போதும் போல் ஆட்டம் பாட்டம் என செம்ம குத்தாட்டதோடு இன்றைய பொழுது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு விடிந்தது.  

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் தண்ணீருக்கும், எரிவாயுவுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறித்து அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

'இந்த உலகில் தண்ணீருக்கும் எரிவாயுவிற்கும் தட்டுப்பாட்டு இருப்பது அனைவரும் தெரிந்ததே. அதனால் தண்ணீருக்கும், எரிவாயுவுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது, எனவே இரண்டையும் சிக்கனாக பயன்படுத்த வேண்டும்' என்று கூறினார். இதற்கு போட்டியாளர்கள் அனைவரும் கைதட்டினர்.

இதனையடுத்து எழுந்த பாத்திமாபாபு, 'தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு அவலநிலை. அது கைதட்டி வரவேற்க வேண்டியது கிடையாது' என்று கூறி பிக்பாஸ் கொண்டுவந்த திட்டத்தை அசிங்கப்படுத்துவது போல் கூறுகிறார். அதற்கு பதிலளித்த சேரன், 'லிமிட்டேஷன் கொண்டு வந்ததற்காக கைதட்டுகிறோம்' என்று கூற அதற்கு பாத்திமாவின் முகம் சுருங்குகிறது.