Asianet News TamilAsianet News Tamil

கல்லூரியில் முருகதாஸ் பட ஷூட்டிங்... சிவகார்த்திகேயனை சுற்றிவளைத்த மாணவர்கள் - கூட்டத்தில் சிக்கித்தவித்த SK

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் எஸ்.கே.23 படத்தின் படப்பிடிப்பு வேலூர் விஐடி கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

Fans Mobbed Sivakarthikeyan in AR Murugadoss Directional SK 23 movie Shooting Spot Vellore VIT gan
Author
First Published Feb 25, 2024, 4:13 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய், அஜித், சூர்யா, ரஜினி போன்றவர்களின் படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஏ.ஆர்.முருகதாஸ். தர்பார் படத்துக்கு பின்னர் சுமார் நான்கு ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்த அவர், தற்போது தன்னுடைய அடுத்த பட பணிகளை தொடங்கி இருக்கிறார். அதன்படி தற்போது சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் எஸ்.கே.23 படத்தை இயக்கி வருகிறார் முருகதாஸ்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மிணி வசந்த் நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். எஸ்.கே.23 படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை வேலூரில் உள்ள விஐடி கல்லூரியில் நடத்தி வருகின்றனர். அதில் சிவகார்த்திகேயன், ருக்மிணி ஆகியோர் கலந்துகொண்டு நடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கெட்டப்பை மாற்றி.. சட்டையை கழட்டி விட்டு ரம்யா பாண்டியன் கொடுத்த போஸ்! பாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சிட்டாங்க!

முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிற்காக கல்லூரிக்கு சென்றுள்ள சிவகார்த்திகேயனை காண எக்கச்சக்கமான ரசிகர்கள் குவிந்ததால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது. பின்னர் அவருடன் செல்பி எடுக்க ரசிகர்கள் திரண்டதால் அவர் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார்.

அனைவருடன் செல்பி எடுக்க முடியாது என்பதால் ஒரே செல்பியாக அனைவருடனும் எடுத்துவிட்டு காரில் கிளம்பிச் சென்றார் எஸ்.கே. அவரது காரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இப்படத்திற்கு சிவகார்த்திகேயன் வித்தியாசமான ஹேர் ஸ்டைல் வைத்திருப்பதும் அந்த வீடியோவிலேயே தெரிகிறது.

இதையும் படியுங்கள்... காதல் படங்களின் காட்ஃபாதர்... இயக்குனர் கவுதம் மேனனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

Follow Us:
Download App:
  • android
  • ios