அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவர் படத்திற்கு எப்போதுமே கிடைக்கும் மாஸ் ஓப்பனிங் இருக்கும்.

இந்நிலையில் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள ஒரு வீட்டில் நடந்துள்ளது.

இதை அறிந்த ரசிகர்கள் பலரும் தல வருகிறார் என கிளப்பிவிட அந்த வீட்டை சுற்றி கூட்டம் கூடியது அந்த பகுதியில்.

பிறகு தான் தெரிந்தது அன்றைய படப்பிடிப்பில் காஜல் மட்டுமே கலந்துக்கொண்டார், அஜித் இல்லாமல் சில காட்சிகளை சிவா எடுத்துள்ளார் என்று.

இதனால் அஜித்தை பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசையுடன் பார்க்க வந்து மிகவும் சோகமாக திரும்பி சென்றனர்.