பிரபலங்கள் மற்றும் அவர்களுடைய வாரிசுகள் எங்கு வந்தாலும், அவர்களுடன் செல்பி எடுத்துக்கொள்வதை பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். அதிலும் அவர் நடிகை என்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடிவிடும்.

அந்த வகையில்,  பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா அலி கான். தற்போது பாலிவுட்டில் திரையுலகில்  நடித்து மெல்ல மெல்ல வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். அதே போல் அவ்வப்போது, சமூக வலைத்தளத்தையே தெறிக்கவிடும் அளவிற்கு, கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் சாரா அலிகான், ஜிமிற்கு சென்று விட்டு வெளியே வந்த போது, சில ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்து கொள்ள ஆர்வமாக கிட்டே சென்றனர். சாரா அலிகானும், ரசிகர்களை வரவழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார். 

அந்த கூட்டத்த்தில் இருந்த ரசிகர்கர் ஒருவர் திடீர் என, சாரா அலிகான் கையில் முத்தம் கொடுக்க முயற்சித்தார். இதனை சுதாரித்து கொண்ட நடிகை திடீர் என தன்னுடைய கையை வெடுக்கென இழுத்து கொண்டார். பின் அங்கிருந்த பாதுகாவலர் அந்த ரசிகரை அங்கிருந்து விரட்டினர்.

பின் சாரா அலிகான் அங்கிருந்து சிரித்தபடியே காரில் ஏறி சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக, இதனை பார்த்து ரசிகர்கள், சாரா கையில் முத்தம் கொடுக்க முயற்சித்தும் அதனை எளிமையாக கடந்து சென்ற விதம் அருமை என பாராட்டி வருகிறார்கள். அதே போல், அவர் தன்னுடைய பாதுகாப்பிற்கு பாடி கார்ட்  வைத்து கொள்ள வேண்டும் என அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

வைரல் வீடியோ இதோ...