தமிழகத்தில் 24 மணி நேரமும் திரையரங்கங்கள், இயங்கலாம் என தமிழக அனுமதி அளித்துள்ளது. இதனால் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியாகும் போது, இரவு  முழுவதும் கூட திரையிடலாம் என்கிற செய்தி தயாரிப்பாளர்களையும்,  திரையரங்க உரிமையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 10 தேதி அஜித் நடிப்பில் வெளியாக உள்ள நேர்கொண்ட பார்வை படத்தை, விடிய விடிய திரையிட உள்ளதாக சென்னையில் உள்ள, வெற்றி திரையரங்கின் உரிமையாளர் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

"இதுகுறித்து அவர் கூறுகையில் 24 மணி நேரமும் திரையரங்கம் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தை விடிய விடிய திரையிட திட்டமிட்டுள்ளோம்.  ரசிகர்களுக்கு அன்று தூங்க இரவு தான் என ட்வீட் செய்துள்ளார்." இது அஜித் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.