famouse serial actor is the salsa mani sister
விஜய் டிவி நடத்திய ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு, சீரியல் நடிகை தேவி பிரியாவுடன் இணைந்து நடனமாடிவர் சால்சா மணி. இவருடைய நடனத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.
நடனத்தில், ப்ரேக், வெஸ்ட்டன், உள்ளிட்ட பல ஸ்டைல் இருக்கு, இதில் சால்சா என்ற நடன முறையை தேர்வு செய்து பிரபலமானவர் சால்சா மணி.
இவர் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் மேடைகளில் நடனமாடியுள்ளார். இதுவரை தன்னுடைய காதல் மனைவி ஷீலாவை மட்டுமே கேமரா முன் காட்டிய இவர், மற்றபடி தன்னுடைய குடும்பத்தை பற்றி எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்தார்.
இந்த நிலையில் சால்சா மணியின் அக்கா வேறு யாரும் இல்லை, பிரபல சீரியல் நடிகை ஜெயஸ்ரீ நாயர் தானாம். இவர் நாதஸ்வரம் உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜெயஸ்ரீ நாயர் பேசும்போது, நான் தான் மொட்டை மணியின் அக்கா. ஆனால் இதை வெளியில் சொன்னால் யாரும் நம்புவது இல்லை என கூறியுள்ளார், அதேபோல் தனக்கு மணி தான் முதல் மகன், அவனுக்கு சின்ன அடிபட்டாலும் நான் பதறிபோவேன். அவனும் என் மீது மிகவும் அக்கறையாக இருப்பான் என்று கூறியுள்ளார்.
