Asianet News TamilAsianet News Tamil

காப்பான் படம் குறித்து பிரபலம் போட்ட அதிரடி ட்விட்!

சூர்யா - சயிஷா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த இயக்கியுள்ள திரைப்படம் 'காப்பான்'.  என்.ஜி.கே படத்தை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது.
 

famouse personality twit for kabilan
Author
Chennai, First Published Jul 20, 2019, 7:25 PM IST

சூர்யா - சயிஷா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த இயக்கியுள்ள திரைப்படம் 'காப்பான்'.  என்.ஜி.கே படத்தை தொடர்ந்து, சூர்யா நடிப்பில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. இதனையடுத்து இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

famouse personality twit for kabilan

இந்த போஸ்டரில் பாடலாசிரியர்களின் பெயர்கள் அச்சுப்பிழையா? என ஒருசிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏனெனில் அந்த போஸ்டரில் வைரமுத்து, கபிலன், கபிலன் வைரமுத்து என குறிப்பிடப்பட்டுள்ளதே அதற்கு காரணம். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கபிலன் வைரமுத்து, பாடலாசிரியர்களின் பெயர் பட்டியல் அச்சுப் பிழையா என்று சிலர் கேட்கிறார்கள். மூன்று பேரும் ஒரே படத்தில் எழுதுவது இது முதல் முறை.. பெயர்களைத் தனித்தனியாக வாசிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios