தமிழ் திரையுலகில், ஒரு கல்லுாரியின் கதை, மாத்தி யோசி, போன்ற வித்தியாசமான கதைகளை இயக்கி, ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நந்தா பெரியசாமி. இவர் வாழ்க்கையில் மிகவும் போராடி வெற்றி பெற்ற எதார்த்தமான பெண் ஒருவரின் வாழ்க்கையை படமாக்க முடிவு செய்து, தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அணுகியுள்ளார்.

நந்தா பெரியசாமி கூறிய முழு கதையும் கேட்ட நயன்தாராவிற்கு கதை மிகவும் பிடித்து போனதால். அந்த பெண்ணின் வாழ்க்கையை படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால் நயன்தாராவோ... அடுத்தடுத்து மற்ற படங்களில் நடிக்க கவனம் செலுத்தியுள்ளாரே தவிர, நந்தா பெரியசாமியின் படத்தை பற்றி கண்டு கொள்ளவே இல்லை. தொடர்ந்து, பல மாதங்கள் நயன்தாராவிற்காக காத்திருந்து அலுத்து போன அவர் பொங்கி எழுந்து, இந்த படத்தின் கதையை டாப்ஸியிடம் கூற அவர் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 

இந்த படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குனர், ஆர்காஷ் கருணா தயாரிக்கிறார்.  இதுகுறித்து அறிந்த நயன்தாரா உடனடியாக நந்தாவை தொடர்பு கொண்டு பேச முயன்ற போது, நயன்தாராவின் அழைப்பை கூட நிராகரித்து விட்டதாக கூறுகிறார்கள் இந்த படக்குழுவில் இடம்பெற்றுள்ள சிலர்.