அப்பா வயது மதிக்க தக்க நடிகர் ஒருவர் தன்னை குளியல் அறையில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார் என இளம் நடிகை ஒருவர் கூறியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பா வயது மதிக்க தக்க நடிகர் ஒருவர் தன்னை குளியல் அறையில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார் என இளம் நடிகை ஒருவர் கூறியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மீடூ விவகாரம் இந்தியா முழுவதும், பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் நடிகை பிரெர்னா கண்ணா புதிதாக மூத்த நடிகர் ஒருவர் மீது புகார் கொடுத்துள்ளார். 

‘ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்த பிரெர்னா கண்ணா தமிழில் 'வேறென்ன வேண்டும்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரெர்னா கண்ணா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய அப்பா வயதில் இருக்கும் நடிகர் ஒருவர் ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தில் தனக்கு முக்கிய கேரக்டர் கொடுப்பதாக கூறி பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்கு வர சொன்னார். அவருடைய பேச்சை நம்பி நானும் அங்கு சென்றேன்.

தன்னுடைய கேரக்ட்டரில் பார்க்க வேண்டும் என கூறி கண்களில் உள்ள ஐலைனரை அழிக்க சொன்னார். இதனால் நான் குளியலறைக்கு சென்றேன். என்னை பின்தொடர்ந்து வந்த அவர் திடீரென என் பின்னால் குளியலறைக்கு வந்து என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரை தள்ளிவிட்டுவிட்டு வெளியே ஓடி வந்துவிட்டேன். பின் அவர் என்னை தொலைபேசியில் அழைத்த போதும் அதனை எடுக்க மறுத்து விட்டதாகவும் அவருக்கு தன்னுடைய வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.