கணவர் ராஜ் குந்த்ரா விவகாரத்தில் மிகவும் மன உளைச்சலில் இருந்து வரும், ஷில்பா ஷெட்டி கணவரை விட்டு பிரிய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கணவர் ராஜ் குந்த்ரா விவகாரத்தில் மிகவும் மன உளைச்சலில் இருந்து வரும், ஷில்பா ஷெட்டி கணவரை விட்டு பிரிய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகை ஷில்பா ஷெட்டி பாலிவுட் நடிகையாக இருந்தாலும், தமிழில் 'ரோமியோ', மற்றும் விஜய் நடித்த 'குஷி' படத்தில் நடித்துள்ளார். கணவர், குழந்தைகள் என மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது, வெளிநாட்டு செயலுக்கு ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப்படங்களை தயாரித்து விற்பனை செய்த விவகாரம். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர் தற்போது மும்பையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணையை துவங்கிய பின்னர், ராஜ் குந்த்ரா மீது, அடுத்தடுத்த பல மாடல்கள் மற்றும் நடிகைகள் புகார் கொடுத்தனர். மேலும் இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு உள்ளதா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதனை மறுத்து வந்த ஷில்பா ஷெட்டி கணவருக்கு நேராக இவரிடம் விசாரணை செய்த போது, கோவத்தில் கணவரை நன்கு திட்டி அங்கேயே பிரச்சனை செய்துள்ளார். பின்னர் போலீசார் தான் அவரை சமாதானம் செய்துள்ளனர்.

மேலும் இதன் காரணமாக தன்னுடைய கணவரை பார்ப்பதையும் முற்றிலுமாக ஷில்பா ஷெட்டி தவிர்த்து விட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது கணவரை விட்டு பிரிந்து விடலாம் என்கிற முடிவில் ஷில்பா ஷெட்டி உள்ளார் என பாலிவுட் திரையுலகில் ஒரு தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஷில்பா ஷெட்டிக்கான தனி ரசிகர்கள் கூட்டம் பாலிவுட் திரையுலகில் இப்போதும் உள்ளனர். எனவே சில படங்களில் இவரை நடிக்க வைக்கவும் பலர் அணுகுகிறார்கள். இதை தவிர மாடலிங், விளம்பரம், மற்றும் டிவி நிகழ்ச்சிகள் மூலமும் ஒரு பெரிய தொகை கிடைத்து வருகிறது. எனவே தன்னுடைய கணவர் சொத்தில் இருந்து ஒரு பைசா கூட வேண்டாம், என்றும்... கணவரை விட்டு பிரியும் முடிவில் அவர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து ஷில்பா ஷெட்டி தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.