படப்பிடிப்புக்காக விமானத்தில் சென்ற போது, சின்னத்திரை நடிகையை ஆபாசமாக பேராசிரியர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதை அறிந்து அந்த நடிகை அவரை விமானத்திலேயே அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத்தில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஒருவர் பயணித்துள்ளார். அவருக்கு அருகே அமர்ந்திருந்த விஜய் பிரகாஷ் என்கிற கல்லூரி பேராசிரியர், அந்த நடிகையை தன்னுடைய செல்போனில் பல கோணங்களில் ஆபாசமாக புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது.

அவரின் செய்கைகளை வைத்து சுதாரித்துக் கொண்ட நடிகை அவரிடம் சென்று புகைப்படங்களை டெலிட் செய்யுமாறு கூறியுள்ளார். 

ஆனால் அந்த பேராசிரியர் அது போல் எந்த புகைப்படமும் எடுக்க வில்லை என கூற, ஒரு நிலையில் அந்த நடிகை பேராசிரியர் விஜய் பிரகாஷை கன்னத்தில் பளார் பளாரென விமானத்திற்குள்ளேயே அனைவர் மத்தியிலும் அறைந்தார்.

பின் இந்த நடிகையுடன் வந்திருந்த துணை நடிகர்கள் மற்றும் சிலர், விமானம் தரையிறங்கியதும் இது குறித்து விமான நிலைய போலீசாரிடம் புகார் அளித்தனர். 

போலீசார். அந்த பேராசிரியர் செல்போனை சோதனை செய்தபோது ஆபாசமான வகையில் அவர் புகைப்படம் எடுத்தது உறுதி செய்யப்பட்டது. 

இதைதொடர்ந்து புகைப்படங்களை டெலிட் செய்ததுடன் அந்த பேராசிரியரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.