கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பொது கூட்டத்தில் பேசிய 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவரும், நடிகருமான கமல், பிரபல கட்சி ஒன்று தன்னை அவர்கள் கட்சியில் இணைய கூறி, 100 கோடி பேரம் பேசியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இவரை தொடர்ந்து தற்போது இதோ போன்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன். ஆனால் எந்த கட்சி தலைவர் பேரம் பேசினார் என்பதை மட்டும் அவர் வெளியிடவில்லை.

இதுகுறித்து அவர் சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் நடந்த புத்தக விழாவில் பேசியுள்ளார். அப்போது 'பிரபல அரசியல் கட்சியின் தலைவர் தன்னை தொடர்பு கொண்டு, அவருடைய அரசியல் கட்சியில் சேர்ந்து விடுமாறு தனக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதற்காக தன்னிடம் '100 கோடி' பேரம் பேசியதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு பார்த்திபன் தனக்கு அரசியல் தெரியாது என்றும், அதில் ஈடுபட விருப்பம்மில்லை என்று கூறி மறுத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.