Asianet News TamilAsianet News Tamil

பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான பிரான்சிஸ் கிருபா உடல் நலக்குறைவால் காலமானார்!!

பல திரைப்படங்களில் பாடலாசிரியராகவும், காமராஜரின் வாழ்க்கை படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி பிரபலமான கவிஞர் பிரான்சிஸ் கிருபா நேற்று நள்ளிரவு உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து இவருக்கு, திரையுலகை சேர்ந்த பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
 
Famous poet and songwriter Francis Kiruba has passed away
Author
Chennai, First Published Sep 17, 2021, 11:04 AM IST

பல திரைப்படங்களில் பாடலாசிரியராகவும், காமராஜரின் வாழ்க்கை படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி பிரபலமான கவிஞர் பிரான்சிஸ் கிருபா நேற்று நள்ளிரவு உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து இவருக்கு, திரையுலகை சேர்ந்த பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

கவிஞர் பிரான்சிஸ் கிருபா திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பத்தினிப்பாறை என்ற கிராமத்தைச் சேர்த்தவர். மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக் காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், உள்ளிட்ட பல கவிதைகள் மூலம் மக்களால் நன்கு அறியப்பட்டவர். நவீன கவிதை எழுத்தாளர் என்கிற தனி சிறப்பும் இவருக்கு உண்டு.

Famous poet and songwriter Francis Kiruba has passed away

கவிதை உலகை தாண்டி, வெண்ணிலா கபடிகுழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம், குரங்கு பொம்மை உள்ளிட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக மறைந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில், திரைக்கதை மற்றும் வசனம் எழுதி பிரபலமானார். 'கன்னி' எனும் புதினத்திற்கு 2007 ஆம் ஆண்டு ஆனந்த விகடனின் சிறந்த புதினம் விருது கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது, 'சம்மனசுக்காடு' கவிதைத் தொகுப்புக்காக சுஜாதா விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.

Famous poet and songwriter Francis Kiruba has passed away

சமீப காலமாகவே உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு திடீர் என உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல எழுத்தாளர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இவருடைய இறப்புக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios