Asianet News TamilAsianet News Tamil

அது என்ன ஆப்பிள் ஜூசா? தலையில் கிளாஸ்.. அனிமல் பாட்டுக்கு செம டான்ஸ் போட்ட சாக்ஷி அகர்வால் - வீடியோ வைரல்!

Sakshi Agarwal Dance : ரன்பிர் கபூரின் அனிமல் படம் எந்த அளவிற்கு ஹிட்டானதோ, அதை விட சற்று அதிகமாகவே அதில் வரும் ஒரு பாடல் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. ரீலிஸ் பக்கம் போனாலே அந்த பாடல் தான் ஒலிக்கிறது என்றால் அது மிகையல்ல.

Famous Kollywood Actress Sakshi Agarwal dancing to ranbir kapoor animal movie song ans
Author
First Published Dec 22, 2023, 8:06 AM IST

பிரபல இயக்குனர் அட்லி அவர்கள் இயக்கத்தில் வெளியான ராஜா ராணி என்கின்ற திரைப்படத்தின் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு திரைத்துறையில் அறிமுகமான நடிகை தான் சாக்ஷி அகர்வால். அதனை தொடர்ந்து கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் அவர் நடிக்க தொடங்கினார். காலா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக சாக்ஷி அகர்வால் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 10 ஆண்டுகளாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் சாக்ஷி அகர்வாலுக்கு எதிர்வரும் 2024 ஆம் ஆண்டில் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளது. அதில் ஒரு சில திரைப்படங்களில் அவர் கதையின் நாயகியாக களம் இறங்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

முடிவுக்கு வந்த காத்திருப்பு.. மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ் - ரூட் நம்பர் 17 ரிலீஸ் எப்போது?

தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தனது கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்பொழுது அனிமல் படத்தில் வரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளது மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. தலையில் ஒரு கிளாஸ் வைத்துக்கொண்டு, அனிமல் படத்தில் வரும் அந்த பிரபலமான பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

சாக்ஷி அகர்வால் பிரபல நடிகர் யோகி பாபுவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துவருகிறார். மேலும் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் இப்பொது படங்களில் நடித்து வருகின்றது. சாரா என்ற படத்தில் தான் சாக்ஷி அகர்வால் இப்போது கதையின் நாயகியாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios