பிரபல இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'தி கபில் சர்மா' என்கிற நிகழ்ச்சியில் பாட்டி வேடத்தில்,  வந்து காமெடியில் தூள் கிளப்பி வருபவர்,  காமெடி நடிகர் அலி ஆஸ்கர். இவர் விபத்தில் சிக்கிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோர விபத்தில், அவருடைய காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு காயமும் இல்லாமல் அலி ஆஸ்கர் உயிர் தப்பியுள்ளார். 

நேற்று காலை நடந்த இந்த பயங்கர விபத்து குறித்து நடிகர் அலி ஆஸ்கார் கூறுகையில், 'என்னுடைய கார் சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது, மிகவும் வேகமாக வந்த லாரி என் காரின் முன் பகுதியில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. 

இதனால் அதிர்ச்சி அடைந்தேன், பின் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மும்பை போலீசார் என்னை பத்திரமாக மீட்டனர். இதற்காக போலீசாருக்கு என்னுடைய நன்றிகள் என தெரிவித்துள்ளார். 

மேலும் தன்னுடைய கார், விபத்திற்குள்ளானதால் தான் மருத்துவமனையில் இருப்பதாக பல வதந்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அது உண்மை இல்லை. தற்போது நலமுடன் உள்ளதாக கூறியுள்ளார். 

ஆபத்து காலத்தில் விரைந்து வந்து உதவிய போலீசாருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவிக்கும் வகையில் ட்விட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார் அலி ஆஸ்கர்.