famous celebraty scolding oviya? why

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புது போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியுள்ளவர் தொகுப்பாளினியும் நடிகையுமான காஜல். இவர் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர் என்பதால் இவர் மூலம் பிரச்னையை உருவாகத்தான் பிக் பாஸ் தரப்பினர் இவரை உள்ளே கொண்டு வந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், இவரை அனைவரும் டார்கெட் செய்வது போல் உள்ளது. முதலில் தன்னால் டாஸ்க் செய்யமுடியாது என்று கூறி தன்னை அனுப்பி விடுமாறு பிக் பாஸ்ஸிடம் கூறுகிறார் காஜல். 

பின் வையாபுரியிடம் சினேகன் "மக்கள் ஓவியாவிற்கு ஆதரவாக இருக்கிறார் என்று தெரிந்தும்" இவர் ஓவியாவை திட்டி நெகடிவ் பப்லிசிட்டி தேடுகிறார் என்று கூறுகிறார்.

மேலும் நேற்று முழுவதும் காஜலிடம் நன்றாக பேசிக்கொண்டிருந்த ரைசாவும், காஜலை ஒரு காமெடி பீஸ் என ஆரவிடம் கூறுகிறார். இதற்கு காஜல் ஏதாவது பிரச்சனை செய்வாரா இல்லையா என்று பொறுத்திருந்து பார்ப்போம்