பிரபல நடிகை ஒருவர் தனது காதலனை திடீரென கோவாவில் வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 மஸ்ஸான் எனும் இந்திப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்வேதா திருப்பாதி. இவர் நடித்த ஹரம்கர் படமும் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது. ஆனால் இந்த இரண்டு படங்களிலுமே இவர் ஹீரோக்களுடன் மிகவும் நெருக்கமாக நடித்து இருப்பார். முத்தக்காட்சிகள் மட்டும் இல்லாமல் படுக்கை அறை காட்சிகளிலும் தயவு தாட்சன்யம் இல்லாமல் கவர்ச்சி காட்டியிருப்பார்.

  இந்த நிலையில் ஸ்வேதா திருப்பாதிக்கு வயதும் 32 ஆகிவிட்டது. எனவே தன்னை  உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்வேதாவை அவரது காதலன் சைதன்யா வலியுறுத்தி வந்துள்ளார். பிரபல பாடகராக இருக்கும் சைத்தன்யா, தன்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் தான் வேறு யாரையேனும் கல்ணாயம் செய்து கொள்ள நேரிடும் என்று ஸ்வேதாவை எச்சரித்துள்ளார். அத்துடன் திரைப்படங்களில் நடிக்கும் போது கதையை தேர்வு செய்து நடிக்குமாறும், படுக்கை அறை காட்சிகளில் நடிக்க கூடாது என்றும் சைதன்யா நடிகை ஸ்வேதாவுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்வேதா திருமண வாழ்க்கையா – சினிமா வாழ்க்கையா என்று யோசித்துள்ளார். வயது 32 ஆன நிலையில் சினிமாவிலும் அடுத்தடுத்து விபரீதமான கதை களம் கொண்ட வாய்ப்புகளே தேடி வருவதை ஸ்வேதா உணர்ந்த கொண்டார். எனவே சினிமா வாழ்வுக்காக திருமண வாழ்வை கெடுத்துவிடக்கூடாது என்று ஸ்வேதா திவாரி முடிவெடுத்துள்ளார்.

மேலும்    உடனடியாக தான் திருமணத்திற்கு தயார் என்றும் ஸ்வேதா காதலன் சைதன்யாவிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஸ்வேதா – சைதன்யா திருமணம் கோவாவில் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது.