Asianet News TamilAsianet News Tamil

திருமணத்திற்கு முன் கர்ப்பமான பிரபல நடிகை... அதிர்ச்சியில் திரையுலகம்...

famous actress for before pregnancy
famous actress for before pregnancy
Author
First Published Aug 27, 2017, 4:54 PM IST


பாலிவுட் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள், தங்களுடைய காதலர்களுடன் திருமணத்திற்கு முன்பே லிவிங் டூ கெதர் என்கிற பெயரில் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் கூட கேடி, நண்பன் போன்ற படங்களில் நடித்த இலியானா பத்திரிகையாளர்களுக்கு முன் அவரும் அவருடைய காதலரும் ஒன்றாக வசித்து வருவதை ஒற்றுக்கொண்டார்.

இதே போல் தற்போது பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான நர்கிஸ் ஃபக்ரி.  நடிகர் பிரேம் சோப்ராவை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார்.

இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று பாலிவுட் திரையுலகம் எதிர்பார்த்த நிலையில்,  இவர்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு  பிரிந்துவிட்டனர். 

இந்நிலையில் நர்கீஸ் சமீபத்தில் விமான நிலையத்தில் கைகளால் பாதி முகத்தை மூடியபடி நடந்து சென்றார். அவரது வயிறு பெரியதாக தெரிந்துள்ளது.

இந்த போட்டோ வைரலாக பரவியுள்ளது, மேலும் அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறார் என தகவல்கள் பரவியது. இதற்கு நர்கீஸ் ட்விட்டரில் கர்ப்பமாக இல்லை என்றும், ஹாம்பர்கர் சாப்பிட்டதால் அப்படி தெரிகிறது என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios