famous actress dressed up like super star to watch his movie
காலா திரைப்படம் நேற்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில், பிரம்மாண்டமாக ரிலீசாகியது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே திரைக்கு வந்திருக்கும் காலா, நல்ல விமர்சனங்களையே பெற்றிருக்கிறது.ஆனால் வழக்கமாக ரஜினி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு தான் கிடைக்கவில்லை. காலா படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள், ரஞ்சித்தை வெகுவாக பாராட்டி இருக்கின்றனர்.

காலா திரைப்படத்தில் ரஜினியின் கருப்பு நிற ஆடைகள், திரைப்படம் ரிலீசாகும் முன்பே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த கருப்பு வேட்டி சட்டையில் தான் நேற்று ரஜினி ரசிகர்கள் பலரும், காலா திரைப்படத்தை பார்க்க வந்திருந்தனர்.

பிரபல காமெடி நடிகையும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவருமான ஆர்த்தியும், நேற்று காலா திரைப்படம் காண வந்திருந்தார். படம் பார்க்க வந்திருந்த ஆர்த்தி, ரஜினி கெட்டப்பில் கருப்பு நிறத்தில் வேட்டி சட்டை அணிந்திருந்தார். அவரின் உடையை பார்த்து, ஆர்த்தி ரசிகர்கள் அவரை பாராட்டி இருக்கின்றனர். பாபா முத்திரையுடன் ஆர்த்தி கொடுத்திருக்கும் போஸ், ரஜினி ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருக்கிறது.
