Asianet News TamilAsianet News Tamil

ஓவர் போதை..! நடுரோட்டியில் துடிதுடித்து இறந்த பிரபல நடிகை...!

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளராகவும் நடிகையாகவும் வலம் வந்தவர் அமெரிக்காவை சேர்ந்த லிரிக் மெக்கென்ரி.
 

famous actress death in full durgs
Author
Chennai, First Published Aug 16, 2018, 11:53 AM IST

பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளராகவும் நடிகையாகவும் வலம் வந்தவர் அமெரிக்காவை சேர்ந்த லிரிக் மெக்கென்ரி.

இவருடைய தந்தை ஹாலிவுட் பட இயக்குனர். மேலும் தன் தந்தையுடன் இணைந்து  லிரிக் மெக்கென்ரி சில படங்களை தயாரித்துள்ளார்.

இவர் தன்னுடைய 26 ஆவது பிறந்த நாளை நியூயார்க்கில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினார். இந்த கொண்டாட்டம் விடிய விடிய நடந்துள்ளது. பின்பு தான் அனைவரும் அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது.

famous actress death in full durgs

இந்நிலையில் ரோட்டு ஓரத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக நியூயார்க் போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்திய போது, ரோட்டில் இறந்து கிடந்தவர்  லிரிக் மெக்கென்ரி என்று தெரியவந்தது.

இவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக  மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பிரேத பரிசோதனையில்  லிரிக் மெக்கென்ரி அளவுக்கு அதிகமாக மது குடித்தால் போதையில் மூச்சி திணறி, துடிதுடித்து இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

famous actress death in full durgs

மேலும் அவர் கோக்கைன் என்ற போதை மருந்தையும் எடுதுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளனர். லிரிக் மெக்கென்ரி பிறந்த நாள் அன்று துடிதுடித்து இறந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios