Asianet News TamilAsianet News Tamil

புற்றுநோயால் பிரபல நடிகை மரணம்...! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

மனிதர்கள் நாகரீகம் என்ற பெயரில், பழமையை மறந்து எப்போது செயற்கை மீது அதிக ஆசை பட துவங்கினரோ அப்போது... மாறியது அவர்களுடைய வாழ்க்கை முறை மட்டும் அல்ல அவர்களுடைய ஆரோக்கியமும்தான். 

famous actress death in cancer
Author
Chennai, First Published Aug 17, 2018, 4:12 PM IST

மனிதர்கள் நாகரீகம் என்ற பெயரில், பழமையை மறந்து எப்போது செயற்கை மீது அதிக ஆசை பட துவங்கினரோ அப்போது... மாறியது அவர்களுடைய வாழ்க்கை முறை மட்டும் அல்ல அவர்களுடைய ஆரோக்கியமும்தான். 

தற்போது நாம், உண்ணும் உணவு முதல் பயன்படுத்தும் பல பொருட்கள் வரை நம் உயிருக்கே உலை வைத்து விடுகிறது. அதில் ஒன்று வயது வித்தியாசம் இல்லாமல் பலரையும் தாக்கும் புற்று நோய்.

famous actress death in cancer

சமீப காலமாக திரையுலகை சேர்ந்த பலர் இந்த கொடூர நோய் தாக்கியுள்ள நிலையில் தற்போது பெங்காலி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான சுசிதா சக்ரபொர்டி என்பவர் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவர் நடித்த ஜெயா, அன்சால் போன்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில வருடங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சுசிதா நேற்று முன்தினம் மாலை காலமானார்.

famous actress death in cancer

இவரின் மறைவு சக நடிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

அன்சால் தொடரில் நடித்த சக நடிகை சர்போரி முகர்ஜி இவரை பற்றி கூறுகையில் புற்றுநோயை எதிர்த்து சுசிதா தைரியமாக போராடினார். நோயை கண்டு அவர் மனம் கலங்கியதே இல்லை. ஆனால் அவருடைய உயிரை நோய் பறித்துவிட்டது. சுசிதாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என கூறியுள்ளார். மேலும் பல நடிகர், நடிகைகள் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios