தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையும் என்கிற ஒரு அவ நம்பிக்கை நடிகைகள் மட்டும் இன்றி, பல பெண்கள் மத்தியிலும் உள்ளது. 

ஆனால், இதனை மருத்துவர்கள் பலரும் மறுத்து வருகின்றனர். அதே போல் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தொய்வடையும் என்கிற காரணத்திற்காகவும் சிலர்   தாய்ப்பால் கொடுப்பதை விரைவாகவே நிறுத்திவிடுகின்றனர். 

ஆனால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தொய்வு ஏற்படுவது இல்லை என்றும், எத்தனை முறை பெண்கள் கர்ப்பம் தரிக்கிரார்களோ அதை பொறுத்தே மார்பக தொய்வு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

தாய்பால் மகத்துவம்:

கடந்த சில வருடங்களாக, நடிகைகள் தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதத்தில், தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டும் புகைப்படத்தை வெளியிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

நடிகை கஸ்தூரி:

அந்த வகையில் நடிகை கஸ்தூரி குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் புகைப்படம் ஒன்றை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார். ஆரம்பத்தில் இந்த புகைப்படம் சர்ச்சையாக பார்க்கப்பட்டாலும் பின்பு தைரியமாக இது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தாய்பாலின் மகத்துவத்தை எடுத்துக்கூறிய இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

 

பாலிவுட் நடிகையின் செயல்:

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகையும் மாடலுமான கிறிஸ்ஸி டெய்ஜென் என்பவர் பிரபல பாடகர் ஜான் லெஜண்ட் என்பவரை கடந்த 2013 ல் திருமணம் செய்துகொண்டார். 

இவர்களுக்கு ஏற்கனவே லூனா என்கிற 2 வயது குழந்தை உள்ளது. மேலும் கடந்த சில மதங்களுக்கு முன் இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. 

இந்நிலையில், அந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுவது போல் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படத்தை பார்த்து சிலர் கடுமையாக இவரை விமர்சித்து வந்தாலும், சிலர் தாய்ப்பாலின் அவசியத்தை எடுத்துக்கூறும் வகையில் இந்த புகைப்படம் இருப்பதாக கூறி 
இவருக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஒரு நாளில் இந்த புகைப்படம் 29  லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Luna making me feed her babydoll so I guess I have twins now

A post shared by chrissy teigen (@chrissyteigen) on Jul 7, 2018 at 10:04am PDT