Famous actor who became a beautiful girl in competition with heroine Is this a dictation?

ஒவ்வொரு படத்திற்காக ஹீரோக்கள் கதைக்கு ஏற்ப தங்களுடைய கெட்டப்பை மாற்றுவது வழக்கமான ஒன்றுதான்.

இதுபோன்று தமிழ் சினிமாவில் மட்டுமல்ல கன்னட சினிமாவிலும் நடக்கும். அந்த வகையில், தது ரசிகர்களுக்காக கன்னட நடிகர் உபேந்திரா ஒரு புது கெட்டப் ஒன்று போட்டுள்ளார்.

ஆம். அவர், தற்போது “ஹோம் மினிஸ்டர்” என்ற கன்னட படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். படத்தின் தலைப்பை பார்த்து அரசியல் படம் என்று நினைக்க வேண்டாம்.

“வீட்டை நிர்வகிப்பவர்” என்ற அர்த்தத்தில் இந்த தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. வீட்டை நிர்வகிக்கும் குடும்பத் தலைவி பற்றிய படம்தான் இந்த ஹோம் மினிஸ்டர்.

இப்படத்தில் ஹீரோயினாக வேதிகா நடிக்கிறார். இப்படத்தில் வரும் காமெடி காட்சியில் உபேந்திரா பெண் வேடத்தில் நடிக்கிறாராம்.

இந்த நிலையில், தான் பெண் வேடத்தில் இருக்கும் வீடியோவை ஒருவர் டிவிட்டரில் வெளியிட உபேந்திரா அதனை ரீடுவிட் செய்துள்ளார். மேலும், தனது புகைப்படத்தை அவரே டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த பெண் வேடத்திலும் அழகாகத் தான் இருக்கிறார் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை சுஜே கே ஸ்ரீஹரி இயக்குகிறார்.