பழம்பெரும் பாலிவுட் நடிகர் மிதுன்சக்கரவர்த்தி. இவரின் மகன் மஹா அக்ஷய்க்கு இன்று ஊட்டியில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திடீர் என அவர் தலைமரைவாகியுள்ளதால் இவருடைய திருமணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

பிரபல பாலிவுட் நடிகரும், நடிகை ஸ்ரீதேவியின் முதல் கணவருமான மிதுன்சக்கரவர்த்தியின் மகன் மஹா அக்ஷய் ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அந்த பெண் கர்ப்பமடைந்த பின்னர் அவரை கைவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் மஹா அக்ஷய் மீது வழக்கு தொடர்ந்தனர். 

இந்நிலையில் இன்று மஹா அக்ஷய்க்கும் மற்றொரு பெண்ணுக்கும் ஊட்டியில் உள்ள மிதுன் சக்கரவர்த்தியின் பங்களாவில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக அணைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் மஹா அக்ஷக்கு ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஜாமீன் கிடைக்காததால் அவரை கைது செய்ய வாய்ப்புதாக கூறப்பட்டது. எனவே மஹா அக்ஷய் அங்கிருந்து உடனடியாக தலைமறைவானார். இதனால் தடபுடலாக தயாராகிக் கொண்டிருந்து இவருடைய திருமணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.