அசாம் மொழியில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜூகல் அகமது, இவர் கடந்த  மூன்று தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் கீழே விழுந்து இறந்து கிடந்தார்.

அசாம் மொழியில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜூகல் அகமது, இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் கீழே விழுந்து இறந்து கிடந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

உடனடியாக இவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதனால் இவர் சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்ததாக தகவல்கள் பரவியது. மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிசாரும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் அகமதின் குடும்பத்தினர், இவரை சிலர் திட்டமிட்டே கொலை செய்துள்ளதாக, பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் மீது சந்தேகம் உள்ளதாகவும் அவருடைய குடும்பத்தினர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படியில் தற்போது போலீசார் இவரை யாரேனும் கடத்தில் கொலை செய்தார்களா... அல்லது வேறு ஏதாவது காரணமா? என்கிற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.