பிரபல நடிகர் வெங்கட் சுபா (60), கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 25 நாட்களாக அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.50 மணியளவில் உயிரிழந்தார். 

பிரபல நடிகர் வெங்கட் சுபா (60), கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 25 நாட்களாக அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12.50 மணியளவில் உயிரிழந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலரை தாக்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக, தமிழ் திரையுலகை சேர்த்த பிரபலங்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும், ஒரு சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

அந்த வகையில் நேற்று இரவு, பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான வெங்கட் சுபா, தனியார் மருத்துவமனையில் காலமானார். 60 வயதாகும் வெங்கட் சுபா கொரோனா வைரஸால் பாதிக்கபட்டு, திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சில வாரங்களுக்கு முன்பு, தயாரிப்பாளர் டி.சிவா தன்னுடைய நண்பர் வெங்கட் சுபாவுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல் நலமடைய பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொண்டார். 

ஆனால், துரதஷ்டவசமாக பிரபல தமிழ் நடிகரும், தயாரிப்பாளரும், எழுத்தாளருமான வெங்கட் சுபா, மே 29 ஆம் தேதி அதிகாலை 12.48 மணியளவில் உயிரிழந்தார். சென்னை கார்ப்பரேஷன் அதிகாரிகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கட் சுபா 'மொழி ', 'அழகிய தீயே ' மற்றும் 'கண்டா நாள் முதல்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார். கடைசியாக ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா நடிப்பில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் 'ஃபிரன்ஷிப் ' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.