ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமான லிவிங்ஸ்டன் மகள், ஏற்கனவே பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகிய நிலையில், மீண்டும் சீரியலில் நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமான லிவிங்ஸ்டன் மகள், ஏற்கனவே பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகிய நிலையில், மீண்டும் சீரியலில் நடிக்க உள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பிரபல நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் தான் ஜோவிதா, வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமான திரைப்படம் 'கலாசல்'. கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரித்த இந்தபடத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக அறிமுகமானார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகியுள்ளார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்- அஸ்வின் மாதவன். இவர் இயக்குனர்கள் சுந்தர்.C, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து, அணைத்து பணிகளும் முடிக்கப்பட்ட பின்னரும் ஒரு சில காரணங்களால் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்நிலையில் நடித்த முதல் படம் இன்னும் வெளியாகாத நிலையில், நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா, வெள்ளித்திரையில் இருந்து, சின்னத்திரைக்கு தாவினார். சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பூவே உனக்காக என்கிற சீரியலில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். பின்னர் ஒரு சில பிரச்சனை காரணமாக சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இவர் இந்த சீரியலில் இருந்து விலகிய சில நாட்களிலேயே ஹீரோவாக நடித்து வந்தவரும் விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. பட வாய்ப்புக்காக இவர் காத்திருந்தும், எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் சீரியலுக்கே வரும் முடிவை எடுத்துள்ளாராம் ஜோவிதா, அதன்படி... மீண்டும் சன் டிவி புதிய சீரியலின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். கன்னட சீரியலின் ரீமேக்காக உருவாகும் தொடரில் ஜோவிதா உள்ளதாகவும், இந்த தொடரில் கார்த்திக் வாசு மற்றும் நடிகை அம்பிகா ஆகிகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.