தமிழ்சினிமாவில் ஏறக்குறைய 800 க்கும் அதிகமான படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து பிரபலமானவர் நடிகர் சார்லி. தன்னுடைய தனித்தன்மையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர்.

குறிப்பாக விஜய், அஜித், கமல், ரஜினி, என பல முன்னணி நடிகர்கள் படங்களில் இவரை அதிக அளவு முடியும். இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான 'பொய்க்கால் குதிரை' படத்தின் மூலம் ஆரம்பமான சினிமா பயணம், இன்று வரை தொடர்ந்து வருகிறது.

மேலும் கடந்த சில வருடங்களாக, கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில்  இவருடைய மகன் ஆதிதியாவிற்கும் , அமிர்தா என்கிற பெண்ணுக்கும் இன்று சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.

இவர்களுடைய திருமணத்தில், தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகை சரண்யா பொன்வண்ணன், பொன்வண்ணன், ராதாரவி, செந்தில், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். சார்லியின் ரசிகர்களும் தொடர்ந்து அவருடைய மகனுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.