உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா தொற்று ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி அனைவரையும் தொற்றி வருகிறது. குறிப்பாக கொடூர வைரஸை எதிர்த்து போராடும் முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் ஆகியோரும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். 

 

இதையும் படிங்க: ஒருவேளை ஆபாச படமா இருக்குமோ?... டூ பீஸில் படு கேவலமாக போஸ் கொடுத்த மீரா மிதுனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அதையடுத்து திரையுலகில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பல நடிகர், நடிகைகள் அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்த போதும், சிலர் தொற்றால் இருப்பது தொடர்கதையாக மாறி வருகிறது. இதனால் சினிமா ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்து வருகின்றனர். அப்படி தான் முன்னணி நடிகர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

ஸ்பானிஷ் மொழி படங்களில் முன்னணி ஹீரோவாக நடித்து வருபவர் அன்டோனியோ பண்டரெஸ். பல சூப்பர் ஹிட் படங்களையும், விருதுகளையும் குவித்த இவருக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அன்டோனியோ அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: நடிகர் தனுஷ் வீட்டில் விசேஷம்... ஒரே ஒரு போட்டோவால் கசிந்த ஒட்டுமொத்த ரகசியம்...!

கொரோனா தொற்றால் சற்று சோர்வாக உணர்ந்தாலும் தான் நன்றாக இருப்பதாகவும், இந்த தொற்றிலிருந்து விரைவில் குணமடைவேன் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கொரோனா தனிமைப்படுத்தல் காலத்தை படிப்பதற்கும், எழுதுவதற்கும், ஓய்வெடுப்பதற்கும் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.  இந்த தகவலை தனது 60வது பிறந்தநாளன்று அவர் தெரிவித்திருப்பது, ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.