பிரபல நடிகர் திலீப் குமார் திடீர் மூச்சு திணறல் காரணமாக  மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இப்பிரச்சனையை எதிர்கொண்டு வருவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகர் திலீப் குமார் திடீர் மூச்சு திணறல் காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இப்பிரச்சனையை எதிர்கொண்டு வருவதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் செய்திகள்: ராதே ஷியாம் படத்தின் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்? வெளியான தகவல்!

பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் திலீப் குமார் இன்று காலை மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள இந்துஜா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகிறார்கள். இந்த தகவலை அவரது மனைவியம், மூத்த நடிகையுமான சாய்ரா பானு, தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாக சுவாச பிரச்சனை இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

98 வயதாகும் பழம்பெரும் நடிகர் திலீப் குமார், கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொண்டு பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சைரா பானு இந்த வருகை ஒரு வழக்கமான உடல் பரிசோதனைக்கானது என தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்:மூன்று குழந்தை பிறந்த பிறகும் குறையாத அழகு..! ரம்பா பர்த்டே ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பு..!

தற்போது மருத்துவர்களின் சிகிச்சைக்கு பிறகு, திலீப் குமார் உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் விரைவில் இவரது உடல் நிலை குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் திலீப் குமார் பிரபல தமிழ் நடிகை சாயீஷாவின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.