Asianet News TamilAsianet News Tamil

"நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி" என்ற வசனத்தை எழுதியவர் பாலகுமாரன்..!

familiar writer balakumaran passes away
familiar writer balakumaran passes away
Author
First Published May 15, 2018, 5:12 PM IST


பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானதால் திரைத்துறையினர்  அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர்

கடும் மூச்சுத்திணறல் காரணமாக எழுத்தாளர் பாலகுமாரன் நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

பிரபல எழுத்தாளரும் வசன கர்த்தாவுமான இவர், பல்வேறு விருதுகளை பெற்று  உள்ளார்.

இலக்கிய விருதுகள்

ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)

இலக்கியச் சிந்தனை விருது - (மெர்க்குரிப் பூக்கள்)

தமிழ்நாட்டு மாநில விருது - (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)

கலை - கலைமாமணி

மேலும் பல விருதுகளை பெற்றவர் இவர்.

கமல்ஹாசனின் நாயகன், ரஜினியின் பாட்சா, இயக்குனர் ஷங்கரின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி உள்ளார்

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்ற ஊரில் பிறந்தவர் பாலகுமாரன்

ரஜினி நடித்த பாட்ஷா படத்தில், "நா ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன  மாதிரி" என்ற வசனத்தை எழுதியவர் இவர்தான்

இந்த வசனம் மூலம் ரஜினிகாந்தின் புகழ் மேலும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருடைய இறப்பு திரை உலகினரை சோகத்தில் மூழ்க செய்து உள்ளது. இவருடைய இறுதி ஊர்வலம் நாளை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்  பட்டு உள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios