பிரபல சீரியல் நடிகையான வனிதா முதன் முறையாக தன்னுடைய குடும்ப படத்தை வெளியிட்டு உள்ளார்.

நடிகை வனிதா எப்போதுமே பல காமெடி ரோல்களில் நடிக்க கூடியவர். அதே போல், 1980 களில் சில படங்களில் கதாநாயகியாகவும்  நடித்து உள்ளார்

தமிழ் மற்றும் மலையாள படங்களில் ஏராளமான படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை வனிதா..

தொடர்ந்து படங்களிலேயே நடித்து வந்த வனிதா, தற்போது பிரபல சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தமிழ் சீரியல்களான கோலங்கள் மற்றும் அலைகள் போன்ற சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் தனக்கான முத்திரையை பதித்தவர் தான் வனிதா

வனிதா தற்போது முள்ளும் மலரும் என்ற தமிழ் சீரியலில் நடித்து வருகிறார். படங்கள் பொறுத்தவரையில் பெரும்பாலான படங்களில் காமெடி ரோல்களில் நடித்துள்ள வனிதா ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றிற்காக தன்னுடைய சினிமா வாழ்க்கை வரலாறு பற்றி பகிர்ந்து வந்துள்ளார். அப்போது தான் தன்னுடைய குடும்பபுகை படத்தையும் வெளியிட்டு உள்ளார் தற்போதைய சீரியல் நடிகையான வனிதா.